Monday, March 3, 2014

Some Jokes from FB

Hi

I got some jokes in FB and I posted as it is.

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?-ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா,ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான்ஆகனும் . இதுதான் வாழ்க்கை.
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?நல்லா யோசிங்க!குவாட்டர் கூட வராது !!!
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
டிசம்பர் 31 க்கும் , ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .ஆனால் ,ஜனவரி 1க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் .இதுதான் உலகம் .
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்திஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??யோசிக்கனும் ...!!
1:இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
2:ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.தத்துவம்
3:தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,ஆனாஇருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !(என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம்
4:வாழை மரம் தார் போடும் ,ஆனாஅதை வச்சு ரோடு போட முடியாது!(ஹலோ ! ஹலோ !!!!)தத்துவம்
5:பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,ஆனாகால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?( டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
தத்துவம்6:லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,கழித்தல் கணக்கு போடும்போது,கடன்வாங்கித்தான் ஆகனும் .
கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்
T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?
என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.
இளநீர்லயும் தண்ணி இருக்கு ,பூமிலயும் தண்ணி இருக்கு .அதுக்காக ,இளநீர்ல போர் போடவும் முடியாது,பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்கமுடியாது.
வண்டி இல்லாமல் டயர் ஓடும் .ஆனால் ...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,Rewindலாம் பண்ண முடியாது
."Tea"க்கும் "Cofee" க்கும் என்னவித்தியாச்?"Tea"ல ஒரு "e இருக்கும்."Coffee"ல 2 "e" இருக்கு.

Saturday, March 1, 2014

Advice to Husband and wife

அன்புள்ள கணவன் / மனைவிக்கு என் அனுபவத்தில் விளைந்த ஆலோசனைகள் :
1. இப்படித்தான் வாழ வேண்டுமென தீர்மானித்துக்கொள்ளுங்கள் , எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல.
2. எந்த சூழ்நிலையிலும் உங்களது சுயத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம் .ஆனால் அதற்காக ஈகோவுடன் வாழாதீர்கள்.
3. ஒரு குடும்பம் அதாவது கணவன் மனைவி என்றான பின் நான் என்பதை விட நாம் என்பதே சிறக்கும் .
4. குழந்தைகள் இருவருக்கும் பொதுவான சொத்து . இருவருமே என்னுடைய மகன் / மகள் என உரிமை கொண்டாடாதீர்கள் .
5. குழந்தைகளை ஒருவர் கண்டிக்கும்போது , மற்றவரும் கூட சேர்ந்து கண்டிக்காதீர்கள். அதற்காக சப்போர்ட் செய்தும் பேசாதீர்கள் .
6. நாம் ஒழுங்காக இருந்தால்தான் நம் குழந்தைகளும் ஒழுங்காக இருப்பார்கள் .
7. குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே ஒழுக்கத்தை போதியுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள் .ஆண் பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்துங்கள் .ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை அடக்கியாள வாய்ப்பு கொடுக்காதீர்கள்.
8. நாம் காலையில் எழும் பழக்கம் கொண்டிருந்தால்தானே நம் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரும் . எனவே பெரியவரகள் காலையில் எழும் பழக்கம் கொண்டிருங்கள் .
9. பெண் குழந்தை என்றால் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடு கூட்டவும் சமையல் கற்கவும் என நிர்பந்திக்காதீர்கள். ஆண் குழந்தைகளுக்கும் அந்த வேலைகளை கற்றுக்கொடுங்கள் .
10. குழந்தைகளை சிறு வயதிலிருந்தே தானகவே உடை மாற்றவும் அப்படி உடை மாற்ற தனி அறைக்கு சென்று மாற்றவும் பழக்கப்படுத்துங்கள் .
11. குழந்தைகள் அடம் பிடித்தால் கோபம்கொள்ளாதீர்கள் , அடிக்காதீர்கள் . அதனால் குழந்தைகளுக்கு உங்கள் மேல் வெறுப்புதான் வளரும் .
12. குழந்தைகள் தவறு செய்தால் கண்டியுங்கள் . வேண்டாமென சொல்லவில்லை .அவர்கள் செய்த தவறின் ( அது எதுவாகவே இருக்கட்டும் ) விளைவுகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் . மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள் .
13. அவரவர் மாமனார் மாமியாரை மதியுங்கள் .அவர்கள் உங்களுடன் இருக்கும்போதோ அல்லது அவர்கள் ஊருக்கு நீங்கள்செல்லும்போதோ அவர்கள் இப்படியாகப்பட்ட மருமகனை / மருமகளை தாம் பெற்றது புண்னியம் என எண்ணும் படி செய்யுங்கள் .ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள் நீங்களும் வருங்காலத்தில் மாமனார் / மாமியார் ஆகப்போகிறவரே !
14. கவலை யாருக்குத்தானில்லை .அந்த கவலையின் தாக்கத்தை குழந்தைகள் மீது காட்டாதீர்கள் . அதே நேரத்தில் ஒரு 10 - 12 வயது ஆனவுடன் குழந்தைகளுக்கு தத்தம் குடும்ப சூழ்நிலைகளை , வருமான விபரத்தை , சேமிப்பை , கடன் வரவேண்டியதை / கொடுக்க வேண்டியதை , முக்கியமாக எல்.ஐ.சி பாலிஸி விவரங்களை தெரியப்படுத்தி வையுங்கள் .
15. ஆண் / பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் 18 வயது கடந்தவுடன் இருசக்கர வாகனம் , நான்குசக்கரவாகனம் போன்றவைகளுக்கு பழக்கப்படுத்தி ஓட்டுனர் உரிமம் எடுத்துக்கொடுங்கள்
16. விலை உயந்த மொபைல் போன் வாங்கிக்கொடுக்காதீர்கள் வண்டி ஓட்டும்போது மொபைலில் பேசிக்கொண்டே ஓட்டினால கடுமையாக எச்சரிக்கை செய்யுங்கள். இதற்கெல்லாம் தயங்கவே கூடாது. 18 வயதுக்குப்பிறகே மொபைல் போன் உபயோகிக்க வேண்டுமென சொல்லுங்கள்.
17. தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது குழந்தைகளிடம் அவர்களின் எண்ணங்களை பற்றி பேசுங்கள் . அவர்களிடம் ஒரு நண்பராக பழகுங்கள் .
அவர்களின் எதிர்காலத்திட்டமிடல் என்ன என அறியுங்கள். அதற்கு ஏற்றார் போல் ஆலோசனைகளை கூறுங்கள் .
18. வீட்டில் எப்போதும் சந்தோஷ சூழலையே இருக்கும்படி செய்யுங்கள் . வீட்டில் எல்லோருமிருக்கும் நேரங்களில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முயற்சியுங்கள். சின்ன குழந்தைகள் வேறு வீட்டில் அப்படி சாப்பிடுவதை பார்த்து நம் வீட்டில் ஏன் அப்படி நடப்பதில்லை என ஏங்கும்படி செய்யாதீர்கள் .
19. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வையுங்கள் . அங்கங்கே வைத்து விட்டு பின்னால் தேடவேண்டாம்.வீணாக எரியும் விளக்கு , ஓடும் மின்விசிறி இவற்றை அனைத்து வையுங்கள் . மின்சார சிக்கனம் தேவை.
20. குழந்தைகளுக்கு பணத்தின் அருமை தெரியும்படி வளருங்கள் . சேமிப்பை கற்றுக்கொடுங்கள். அதற்கென்று அந்தகாலத்தில் எங்க அப்பா 50 பைசா கொடுத்தால் 10 பைசா சேமிப்பேனாக்கும் என சொல்லாதீர்கள் , சிரிப்பார்கள்.
மோசமான பருவசூழ்நிலைகாரணமாக அட்வைஸ் மழை இத்துடன் நிறுத்தப்படுகிறது . நல்ல பருவம் அமையும் போது மீண்டும் தொடரும்…
அன்புடன் : ந.கல்யாண சுந்தரம் , ஓசூர்

Wednesday, February 19, 2014

Post for children

Copied from my friend facebook page.

அன்புக்குழந்தைகளே !!!!! ( 5 வயது முதல் 10 வயது )….
10 வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாளை மறுநாள் பதிவிடுகிறேன் ..


அட்வைஸ் என்றாலே எட்டிக்காயாய் கசக்கும்தான்..ஆனாலும் இதை படிக்க தெரிந்த குழந்தைகள் படிக்கவும்..அல்லது தாய்-தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளக்கி சொல்லவும்..


1. முதலில் அனைவரிடத்திலும் அன்பாக இருக்க பழகவும்.


2. எந்த ஒரு பழிக்குபழி எண்ணமோ , சமூகத்துக்கு ஒவ்வாத குணமோ கொண்டவர்களாக வளராதீர்கள்.


3. பிடிவாதம் ஒரு சில வயது வரைதான் பயன்படும்.உதாரணம் உங்களுக்கு 5 வயது ஆவதற்க்கு முன் நீங்கள் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்த பெற்றோர் அதன்பின் ஏதும் கேட்டால் வாங்கிக்கொடுக்காமல் அடி கொடுப்பது , நீங்கள் 5 வயதுக்கு முன் பிடித்த பிடிவாதம்தான்.


4. மாலை பள்ளி விட்டு வீடு வந்தவுடனே ஷூ ஒருபக்கம் சாக்ஸ் ஒரு பக்கம் புத்தகப்பை ஒரு பக்கம் என வீசாதீர்கள்..மறு நாள் அதை தேடும் நேரம் வீண். மேலும் தங்கள் பெயர் அட்டை ( பேட்ஜ் ) மற்றும் டை ஐ கழட்டி புத்தகப்பையின் ஒரு பாக்கெட்டில் வைத்து விடுங்கள்,காலை அவசரத்தில் அணிய மறந்தால் கூட பள்ளிக்கு சென்றதும் எடுத்து அணிந்து கொள்ளலாம்..அய்யய்யோ வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டோமே என பயப்பட வேண்டாம். ஃபைன் கட்ட வேண்டாம் .


5. அதே போல் மறுநாள் தேவையான புத்தகங்கள் , டெஸ்ட் நாட்களில் தேவையான பேப்பர் , பேனா , ஸ்கேல் போன்ற பொருட்கள் , ஷூ , சாக்ஸ் டை , சீருடை , தண்ணீர் பாட்டில் போன்றவற்றை முதல் நாள் மாலையே ஒரே இடத்தில் எடுத்து வைத்தால் , மறு நாள் காலை அவசரத்தில் தேடும் வேலை இருக்காது. மேளும் தேவையில்லாத டென்ஷன் குறையும் .


6. குழந்தைகளின் அம்மாக்கள்/அப்பாக்கள் மறு நாள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய டிபன் / லஞ்ச் போன்றவற்றை தீர்மானித்து முதல் நாளே திட்டமிட்டு அதற்குத்தேவையான பொருட்களை சமையலறையில் ஒரே இடத்தில் வைத்திருந்தால் காலை களேபரம் குறையும். லன்ச் பாக்ஸ்களை கூட கழுவி ரெடியாக வைத்திருக்கலாம் . .அதுவும் வேலைக்கு போகும் ( மனைவி ) பெண்கள் இருக்கும் வீட்டில் இதை கடைப்பிடிக்கலாம் .


7. பெரியவர்களை மதியுங்கள் . அதற்காக வட இந்தியர்களைப்போல் பெரியவர்களை எங்கு ( மார்க்கெட் போன்ற வெளியிடங்களில் ) பார்த்தாலும் காலை தொட்டு கும்பிட வேண்டாம். ஒரு வணக்கம் . ஒரு புன்சிரிப்பு.இது போதுமே !


8. பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளை காதுகொடுத்து கேளுங்கள்..அவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்கா விட்டாலும் அதை கிரஹித்து சற்று நேரம் அதை பற்றி அதன் விளைவுகளைபற்றி கொஞ்சமேனும் சிந்தியுங்கள்.


9. எந்த பெற்றோருமே தங்கள் குழந்தைகள் கெட்டுப்போவதற்குண்டான ஆலோசனைகள் சொல்லமாட்டார்கள் என்பதை உணருங்கள். அவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.


10. எந்த உணவுப்பொருளையும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள் . அம்மாவோ அப்பாவோ நீங்கள் விளையாடிக்கொண்டிருக்குபோது உங்களை மட்டும் கூப்பிட்டு ஏதாவது ஸ்னாக்ஸ் கொடுத்து யாருக்கும் கொடுக்காதே என சொல்லிகொடுத்தாலும் கூட ஏம்மா என் கூட விளையாடிக்கொண்டிருக்கும் ராஜாவுக்கும் கொடுத்தால் என்னம்மா , பாவம்லயா அவன் என கேளுங்கள் .


11. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்குவதை தவிருங்கள். எப்போதோ ஒரு நாள் பாருங்கள் தப்பில்லை. போகோ , கார்ட்டுன் , சுட்டி டி.வி. போன்ற நிகழ்ச்சிகளின் அடிமையாகிப்போகாதீர்கள்..அதே போல் ஆங்கில சேனல்களில் வரும் மல்யுத்தம் , சண்டை காட்சிகளை பார்க்காதீர்கள் . தங்கள் மனதில் வன்மம் வளரும்..நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் , அனிமல் ப்ளெனட் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் விலங்குகள் காடுகள் பற்றிய ஒரு அறிவு வளரும் .


12. தங்கள் பேனா , பென்சில் , ஜியோமெட்ரிக் பாக்ஸ் , கால்குலேட்டர் , லஞ்ச் பேக் போன்ற பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.அடிக்கடி தொலைத்து விட்டு அப்பா அம்மாவுக்கு அதை வாங்குவதற்கு பணக்கஷ்டம் கொடுக்காதீர்கள் .


13. தினமும் பள்ளியில் நடக்கும் விஷயங்களை அப்பா அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் . நல்ல மதிப்பெண்கள் பெற்று தாய் தந்தையரை சந்தோஷப்படுத்துங்கள் .


14. தெரியாத , விளங்காத பாடங்களை அம்மாவிடமோ அப்பாவிடமோ ஏன் ஆசிரியரிடமோ கூட ஒரு முறை விளக்கமாக நடத்த சொல்லுங்கள் . அப்படியாகப்பட்ட பாடத்திற்கு கொஞ்சம் அதிக கவனம் கொடுத்து படியுங்கள் .


அவ்வளவுதான் குழந்தைகளே ! சொல்லவேண்டுமென்றால் இன்னும் நிறைய இருக்கிறது . இப்போது இது போதுமே .
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே !!!!!!