Wednesday, February 9, 2022

Going to write about Selenium with Python

 Hi All,

From yesterday I have started to learn about the Selenium with Python.

I am going to write down the blog and step by step methods.

I am going to spend each one hour on learning the selenium with python.

I will update all the tips and tricks which i followed and found out.

I hope I will update the blog without fail.

Thanks


Monday, September 18, 2017

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை 🌷
1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.
'


Monday, June 19, 2017

க்ரீன் பீஸ் மசாலா - Green peas Masala

*க்ரீன் பீஸ் மசாலா*


    பச்சைப்பட்டாணி - 250 கிராம்
    (அல்லது) காய்ந்த பட்டாணி - 150 கிராம்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2 அல்லது 3
    உருளைக்கிழங்கு - ஒன்று
    சீரகம் - அரை தேக்கரண்டி
    ஏலக்காய் - ஒன்று
    கிராம்பு - 2
    இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய்த்தூள் - 1 அல்லது 1.5 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    பச்சை கொத்தமல்லித்தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
    உப்பு - சுவைக்கேற்ப



தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கி மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும்.

அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் விழுதை ஊற்றவும்.

பின்னர் இஞ்சி விழுது சேர்க்கவும். தீயை மெதுவாக வைத்து கிளறி விடவும்.

சிறிது கொதித்ததும் பட்டாணி மற்றும் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்க்கவும்.

பின்னர் சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

குக்கரை மூடி, வெயிட் போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குக்கர் சூடு தணிந்ததும் திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும். பொடியாக நறுக்கின கொத்தமல்லியை மேலே தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, பூரி, நாண் போன்ற வகைகளுக்கு சூப்பர் சைடு டிஷ்.



Wednesday, May 10, 2017

நாங்க ஒன்னும் முட்டாள் அல்ல

*நாங்க ஒன்னும் முட்டாள் அல்ல*
********************************************************
*1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான். என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.*

*2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்.*

*3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.*

*4. நாங்க வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுறப்பவும், சூடம் ஏத்துறப்பவும், சாணியால வாச தொளிக்குறப்பவும், விளக்கு ஏத்துறப்பவும் இருந்த நோய் நொடியில்லாத வாழ்க்கை,  இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு இவன் நினைக்க ஆரம்பிச்ச உடனே எதிர்ப்பு சக்தி குறைச்சு துவண்டு போயிட்டான்.*

*5. நாங்கெல்லாம் பய பக்தியா சாமி கும்பிடுறவரைக்கும் ஒரு முதியோர் இல்லமும் இல்லாமல் இருந்தது, மனுஷ மக்களும் நீதி நேர்மையோடு வாழ்ந்து வந்தனர். இதையெல்லாம் என்றைக்கு மூட நம்பிக்கைன்னு நாத்திகம் பேசினானோ அன்றைக்கு பெத்த அப்பன் ஆத்தால முதியோர் இல்லத்துல கொண்டு போய் தள்ளிட்டான்.*

*இதெல்லாம் சில தகவல்கள் தான்....*

*இன்னும் சொன்னா எலவு வீடு தோத்துடும்.....*

*இனிமேலாவது போலிபகுத்தறிவு* *கொள்கையைவிட்டுபுட்டு திருந்த பாருங்கள்.*

*நமது முன்னோர்கள் சொன்னதை செய்யுங்கள்*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
   
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*   

                         *அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே*

*வாழ்க வளமுடன்*


How to Get files from the directory - One more method

 import os import openpyxl # Specify the target folder folder_path = "C:/Your/Target/Folder"  # Replace with the actual path # Cre...