_*அவனும் நானும்*_
🎎🎉🎎🎊🎎🎍🎎🔥🎎
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். கணவனை உ|ள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ உலக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருவர், மனைவியை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் உன் கணவனைகடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.
"ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது என் கணவரது தங்கையின் திருமணம். நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்.
வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை. இதிலே என்னைய வேறு கூப்பிடுகிறார். பெண் என்றால் அடிமையா என்ன? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு ?
எனக்கே அசதியா இருக்கு. இந்த ஆம்பளைங்கன இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவள் சிறு புன்னகையோடு, " மகளே முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன். ்.ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் கணவனுக்கு துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.
இப்ப அவங்க இல்லை, *நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.* என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.
அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...
விழியோரம் நீர் தேங்க, அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். கணவனின் வெற்றியோ தோல்வியோ, பெருமையோ அவமானமோ மனைவிக்கு அனைத்திலும் சம பங்கு உண்டு. தன் மனைவி தன் உடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானம் தலை குனிவு வேறெந்த அவமானத்தை விட அவனை அதிகம் காயப்படுத்தும். வேதனை படுத்தும்.
எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்.. பஸ் இல் ஏறும் போது ,விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.
பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன். அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார். பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்.
இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாப்பா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி மகளே, நான் வரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் நவ உலக சமத்துவ மனைவி்.
என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?
*வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற* கணவனை மனைவி மதிக்கிறாளா? இல்லை பதில் 100 க்கு 95சதவீதம், இல்லைதான். கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை,* அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் *உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு* மனைவியும் சொல்றதில்லை.
இதெல்லாம் சொல்லணும். அப்படி *ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.*
நல்ல பதிவு🙏🏻
i am presenting here, what are all i am reading and what are all experiences which I got. i am just sharing here. வணக்கம்....நான் விவேக்.. இங்கு எனக்கு கிடைத்த தகவலும் .. என்னை கவர்ந்த செய்திகளும் உங்களுக்கு தருகின்றேன் ...
Wednesday, March 29, 2017
கணவன் மனைவி
Subscribe to:
Post Comments (Atom)
How to Get files from the directory - One more method
import os import openpyxl # Specify the target folder folder_path = "C:/Your/Target/Folder" # Replace with the actual path # Cre...
-
http://podian.blogspot.com/ One of the Good blog in Tamil so you can read current news also.
-
ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை 🌷 1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் ...
3 comments:
Nice
kalakareenka ( Tamil)
Nice post. Keep sharing your thought. cool things
Post a Comment