Copied from my friend facebook page.
அன்புக்குழந்தைகளே !!!!! ( 5 வயது முதல் 10 வயது )….
10 வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாளை மறுநாள் பதிவிடுகிறேன் ..
அட்வைஸ் என்றாலே எட்டிக்காயாய் கசக்கும்தான்..ஆனாலும் இதை படிக்க தெரிந்த குழந்தைகள் படிக்கவும்..அல்லது தாய்-தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளக்கி சொல்லவும்..
1. முதலில் அனைவரிடத்திலும் அன்பாக இருக்க பழகவும்.
2. எந்த ஒரு பழிக்குபழி எண்ணமோ , சமூகத்துக்கு ஒவ்வாத குணமோ கொண்டவர்களாக வளராதீர்கள்.
3. பிடிவாதம் ஒரு சில வயது வரைதான் பயன்படும்.உதாரணம் உங்களுக்கு 5 வயது ஆவதற்க்கு முன் நீங்கள் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்த பெற்றோர் அதன்பின் ஏதும் கேட்டால் வாங்கிக்கொடுக்காமல் அடி கொடுப்பது , நீங்கள் 5 வயதுக்கு முன் பிடித்த பிடிவாதம்தான்.
4. மாலை பள்ளி விட்டு வீடு வந்தவுடனே ஷூ ஒருபக்கம் சாக்ஸ் ஒரு பக்கம் புத்தகப்பை ஒரு பக்கம் என வீசாதீர்கள்..மறு நாள் அதை தேடும் நேரம் வீண். மேலும் தங்கள் பெயர் அட்டை ( பேட்ஜ் ) மற்றும் டை ஐ கழட்டி புத்தகப்பையின் ஒரு பாக்கெட்டில் வைத்து விடுங்கள்,காலை அவசரத்தில் அணிய மறந்தால் கூட பள்ளிக்கு சென்றதும் எடுத்து அணிந்து கொள்ளலாம்..அய்யய்யோ வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டோமே என பயப்பட வேண்டாம். ஃபைன் கட்ட வேண்டாம் .
5. அதே போல் மறுநாள் தேவையான புத்தகங்கள் , டெஸ்ட் நாட்களில் தேவையான பேப்பர் , பேனா , ஸ்கேல் போன்ற பொருட்கள் , ஷூ , சாக்ஸ் டை , சீருடை , தண்ணீர் பாட்டில் போன்றவற்றை முதல் நாள் மாலையே ஒரே இடத்தில் எடுத்து வைத்தால் , மறு நாள் காலை அவசரத்தில் தேடும் வேலை இருக்காது. மேளும் தேவையில்லாத டென்ஷன் குறையும் .
6. குழந்தைகளின் அம்மாக்கள்/அப்பாக்கள் மறு நாள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய டிபன் / லஞ்ச் போன்றவற்றை தீர்மானித்து முதல் நாளே திட்டமிட்டு அதற்குத்தேவையான பொருட்களை சமையலறையில் ஒரே இடத்தில் வைத்திருந்தால் காலை களேபரம் குறையும். லன்ச் பாக்ஸ்களை கூட கழுவி ரெடியாக வைத்திருக்கலாம் . .அதுவும் வேலைக்கு போகும் ( மனைவி ) பெண்கள் இருக்கும் வீட்டில் இதை கடைப்பிடிக்கலாம் .
7. பெரியவர்களை மதியுங்கள் . அதற்காக வட இந்தியர்களைப்போல் பெரியவர்களை எங்கு ( மார்க்கெட் போன்ற வெளியிடங்களில் ) பார்த்தாலும் காலை தொட்டு கும்பிட வேண்டாம். ஒரு வணக்கம் . ஒரு புன்சிரிப்பு.இது போதுமே !
8. பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளை காதுகொடுத்து கேளுங்கள்..அவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்கா விட்டாலும் அதை கிரஹித்து சற்று நேரம் அதை பற்றி அதன் விளைவுகளைபற்றி கொஞ்சமேனும் சிந்தியுங்கள்.
9. எந்த பெற்றோருமே தங்கள் குழந்தைகள் கெட்டுப்போவதற்குண்டான ஆலோசனைகள் சொல்லமாட்டார்கள் என்பதை உணருங்கள். அவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
10. எந்த உணவுப்பொருளையும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள் . அம்மாவோ அப்பாவோ நீங்கள் விளையாடிக்கொண்டிருக்குபோது உங்களை மட்டும் கூப்பிட்டு ஏதாவது ஸ்னாக்ஸ் கொடுத்து யாருக்கும் கொடுக்காதே என சொல்லிகொடுத்தாலும் கூட ஏம்மா என் கூட விளையாடிக்கொண்டிருக்கும் ராஜாவுக்கும் கொடுத்தால் என்னம்மா , பாவம்லயா அவன் என கேளுங்கள் .
11. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்குவதை தவிருங்கள். எப்போதோ ஒரு நாள் பாருங்கள் தப்பில்லை. போகோ , கார்ட்டுன் , சுட்டி டி.வி. போன்ற நிகழ்ச்சிகளின் அடிமையாகிப்போகாதீர்கள்..அதே போல் ஆங்கில சேனல்களில் வரும் மல்யுத்தம் , சண்டை காட்சிகளை பார்க்காதீர்கள் . தங்கள் மனதில் வன்மம் வளரும்..நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் , அனிமல் ப்ளெனட் போன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் விலங்குகள் காடுகள் பற்றிய ஒரு அறிவு வளரும் .
12. தங்கள் பேனா , பென்சில் , ஜியோமெட்ரிக் பாக்ஸ் , கால்குலேட்டர் , லஞ்ச் பேக் போன்ற பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.அடிக்கடி தொலைத்து விட்டு அப்பா அம்மாவுக்கு அதை வாங்குவதற்கு பணக்கஷ்டம் கொடுக்காதீர்கள் .
13. தினமும் பள்ளியில் நடக்கும் விஷயங்களை அப்பா அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் . நல்ல மதிப்பெண்கள் பெற்று தாய் தந்தையரை சந்தோஷப்படுத்துங்கள் .
14. தெரியாத , விளங்காத பாடங்களை அம்மாவிடமோ அப்பாவிடமோ ஏன் ஆசிரியரிடமோ கூட ஒரு முறை விளக்கமாக நடத்த சொல்லுங்கள் . அப்படியாகப்பட்ட பாடத்திற்கு கொஞ்சம் அதிக கவனம் கொடுத்து படியுங்கள் .
அவ்வளவுதான் குழந்தைகளே ! சொல்லவேண்டுமென்றால் இன்னும் நிறைய இருக்கிறது . இப்போது இது போதுமே .
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே !!!!!!
No comments:
Post a Comment