Saturday, March 1, 2014

Advice to Husband and wife

அன்புள்ள கணவன் / மனைவிக்கு என் அனுபவத்தில் விளைந்த ஆலோசனைகள் :
1. இப்படித்தான் வாழ வேண்டுமென தீர்மானித்துக்கொள்ளுங்கள் , எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல.
2. எந்த சூழ்நிலையிலும் உங்களது சுயத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம் .ஆனால் அதற்காக ஈகோவுடன் வாழாதீர்கள்.
3. ஒரு குடும்பம் அதாவது கணவன் மனைவி என்றான பின் நான் என்பதை விட நாம் என்பதே சிறக்கும் .
4. குழந்தைகள் இருவருக்கும் பொதுவான சொத்து . இருவருமே என்னுடைய மகன் / மகள் என உரிமை கொண்டாடாதீர்கள் .
5. குழந்தைகளை ஒருவர் கண்டிக்கும்போது , மற்றவரும் கூட சேர்ந்து கண்டிக்காதீர்கள். அதற்காக சப்போர்ட் செய்தும் பேசாதீர்கள் .
6. நாம் ஒழுங்காக இருந்தால்தான் நம் குழந்தைகளும் ஒழுங்காக இருப்பார்கள் .
7. குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே ஒழுக்கத்தை போதியுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள் .ஆண் பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்துங்கள் .ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை அடக்கியாள வாய்ப்பு கொடுக்காதீர்கள்.
8. நாம் காலையில் எழும் பழக்கம் கொண்டிருந்தால்தானே நம் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரும் . எனவே பெரியவரகள் காலையில் எழும் பழக்கம் கொண்டிருங்கள் .
9. பெண் குழந்தை என்றால் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடு கூட்டவும் சமையல் கற்கவும் என நிர்பந்திக்காதீர்கள். ஆண் குழந்தைகளுக்கும் அந்த வேலைகளை கற்றுக்கொடுங்கள் .
10. குழந்தைகளை சிறு வயதிலிருந்தே தானகவே உடை மாற்றவும் அப்படி உடை மாற்ற தனி அறைக்கு சென்று மாற்றவும் பழக்கப்படுத்துங்கள் .
11. குழந்தைகள் அடம் பிடித்தால் கோபம்கொள்ளாதீர்கள் , அடிக்காதீர்கள் . அதனால் குழந்தைகளுக்கு உங்கள் மேல் வெறுப்புதான் வளரும் .
12. குழந்தைகள் தவறு செய்தால் கண்டியுங்கள் . வேண்டாமென சொல்லவில்லை .அவர்கள் செய்த தவறின் ( அது எதுவாகவே இருக்கட்டும் ) விளைவுகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் . மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள் .
13. அவரவர் மாமனார் மாமியாரை மதியுங்கள் .அவர்கள் உங்களுடன் இருக்கும்போதோ அல்லது அவர்கள் ஊருக்கு நீங்கள்செல்லும்போதோ அவர்கள் இப்படியாகப்பட்ட மருமகனை / மருமகளை தாம் பெற்றது புண்னியம் என எண்ணும் படி செய்யுங்கள் .ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள் நீங்களும் வருங்காலத்தில் மாமனார் / மாமியார் ஆகப்போகிறவரே !
14. கவலை யாருக்குத்தானில்லை .அந்த கவலையின் தாக்கத்தை குழந்தைகள் மீது காட்டாதீர்கள் . அதே நேரத்தில் ஒரு 10 - 12 வயது ஆனவுடன் குழந்தைகளுக்கு தத்தம் குடும்ப சூழ்நிலைகளை , வருமான விபரத்தை , சேமிப்பை , கடன் வரவேண்டியதை / கொடுக்க வேண்டியதை , முக்கியமாக எல்.ஐ.சி பாலிஸி விவரங்களை தெரியப்படுத்தி வையுங்கள் .
15. ஆண் / பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் 18 வயது கடந்தவுடன் இருசக்கர வாகனம் , நான்குசக்கரவாகனம் போன்றவைகளுக்கு பழக்கப்படுத்தி ஓட்டுனர் உரிமம் எடுத்துக்கொடுங்கள்
16. விலை உயந்த மொபைல் போன் வாங்கிக்கொடுக்காதீர்கள் வண்டி ஓட்டும்போது மொபைலில் பேசிக்கொண்டே ஓட்டினால கடுமையாக எச்சரிக்கை செய்யுங்கள். இதற்கெல்லாம் தயங்கவே கூடாது. 18 வயதுக்குப்பிறகே மொபைல் போன் உபயோகிக்க வேண்டுமென சொல்லுங்கள்.
17. தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது குழந்தைகளிடம் அவர்களின் எண்ணங்களை பற்றி பேசுங்கள் . அவர்களிடம் ஒரு நண்பராக பழகுங்கள் .
அவர்களின் எதிர்காலத்திட்டமிடல் என்ன என அறியுங்கள். அதற்கு ஏற்றார் போல் ஆலோசனைகளை கூறுங்கள் .
18. வீட்டில் எப்போதும் சந்தோஷ சூழலையே இருக்கும்படி செய்யுங்கள் . வீட்டில் எல்லோருமிருக்கும் நேரங்களில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முயற்சியுங்கள். சின்ன குழந்தைகள் வேறு வீட்டில் அப்படி சாப்பிடுவதை பார்த்து நம் வீட்டில் ஏன் அப்படி நடப்பதில்லை என ஏங்கும்படி செய்யாதீர்கள் .
19. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வையுங்கள் . அங்கங்கே வைத்து விட்டு பின்னால் தேடவேண்டாம்.வீணாக எரியும் விளக்கு , ஓடும் மின்விசிறி இவற்றை அனைத்து வையுங்கள் . மின்சார சிக்கனம் தேவை.
20. குழந்தைகளுக்கு பணத்தின் அருமை தெரியும்படி வளருங்கள் . சேமிப்பை கற்றுக்கொடுங்கள். அதற்கென்று அந்தகாலத்தில் எங்க அப்பா 50 பைசா கொடுத்தால் 10 பைசா சேமிப்பேனாக்கும் என சொல்லாதீர்கள் , சிரிப்பார்கள்.
மோசமான பருவசூழ்நிலைகாரணமாக அட்வைஸ் மழை இத்துடன் நிறுத்தப்படுகிறது . நல்ல பருவம் அமையும் போது மீண்டும் தொடரும்…
அன்புடன் : ந.கல்யாண சுந்தரம் , ஓசூர்

No comments:

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை

ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை 🌷 1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் '...