கணையாழியில் கடைசிப் பக்கம் எழுதிய சுஜாதாவின் கடைசித் தோற்றம் இது.
27.2.2008 அன்று இரவு சுஜாதா மறைந்தார் என்ற செய்தி கிட்டியது. அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் உடல் அங்கு இல்லை. அமெரிக்காவில் இருக்கும் மகன் வர வேண்டும் என்பதற்காக உடலை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதாகவும் 29.2.2008 அன்று காலையில் தான் உடலைக் கொண்டு வருவார்கள் என்றும் தெரிவித்தார்கள். இரா. முருகன், வைத்தீஸ்வரன், திருப்பூர் கிருஷ்ணன், தேசிகன்.... எனப் பலரும் அங்கு இருந்தார்கள்.
அடுத்த நாள் (29.2.2008) காலை மீண்டும் அங்கு சென்றேன். முந்தைய நாளை விடக் கூட்டம் அதிகம் இருந்தது. காக்கித் தலைகள் நிறைய தெரிந்தன.
சுஜாதா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் நீங்காத் துயில் கொண்டிருந்தார். மவுன அஞ்சலி செலுத்தினேன். இலக்கிய, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அங்கு இருந்தார்கள். இனி பார்க்க முடியாத அவரைப் படத்திலாவது பிடித்து வைப்போம் என்ற எண்ணத்தில் சில படங்கள் எடுத்தேன்.
கண்ணாடிப் பெட்டிக்குள் சுஜாதா
சுஜாதா ரங்கராஜனின் மனைவி, உண்மையான சுஜாதா.
சுஜாதாவின் மகன் ரங்கபிரசாத். அருகில் தேசிகன்.
மலர் அஞ்சலி
முடிந்தது
No comments:
Post a Comment